கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு 150 கிராம்,
சாம்பார் வெங்காயம் 20,
முருங்கைக்காய் 1,
பச்சை மிளகாய் 3,
கத்தரிக்காய் 2,
தக்காளி 2,
புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
பூண்டு 10 பற்கள்,
கடுகு 1/4 ஸ்பூன்,
சீரகம் 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,
சாம்பார் தூள் 3 ஸ்பூன்.
செய்முறை:
ஒரு குக்கர் எடுத்துக்கோங்க. அதுல நாம எடுத்து வைத்த பருப்ப நல்ல வாஷ் பண்ணிட்டு கூடவே அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 10 பூண்டு பற்களையும் சேர்த்து நான்கு முதல் ஐந்து விசில் வர வரைக்கும் வேக வைத்து எடுத்துக்கோங்க. விசில் போனதுக்கப்புறமா கொஞ்சமா கல்லுப்பு சேர்த்து பருப்பை ஒரு மத்து வச்சோ அல்லது கரண்டியாலையோ நல்ல மசிச்சு எடுத்துக்கோங்க.
ஒரு கடாய் வச்சுக்கோங்க. அதுல ரெண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்து ஆயில் ஹீட் ஆனதுக்கு அப்புறமா கடுகு சேர்த்து அது பொரிஞ்சதுக்கப்புறமா சீரகம் சேர்த்து நல்லா பொரிய விடுங்க. பொரிஞ்சதுக்கு அப்புறமா கருவேப்பிலை சிறிதளவு சேர்த்துக்கோங்க. அதுக்கப்புறம் சாம்பார் வெங்காயம் சேர்த்து நல்ல வதக்குங்க. அடுத்ததா நாம எடுத்து வைத்த தக்காளியும் கட் பண்ணி சேர்த்து நல்ல வதக்குங்க. பச்சை மிளகாய் முருங்கக்காய் கத்தரிக்காய் இது எல்லாத்தையும் கட் பண்ணி சேர்த்துக்கோங்க. இந்த காய்கறிகள் வேகிறதுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா வதக்கி வேக விடுங்க. நம்ம ஊறவைத்து எடுத்துக்கிட்ட புளி தண்ணீரையும் ஃபில்டர் பண்ணி சேர்த்துக்கோங்க. அந்த புளி தண்ணீரிலேயே அந்த காய்கறி நல்லா வேகட்டும். மூன்று ஸ்பூன் சாம்பார் தூள கொஞ்சமா தண்ணீர் விட்டு மிக்ஸ் பண்ணி அந்த கலவைகளை சேர்த்துக்கோங்க. நாம வேக வச்சு மசிச்சு எடுத்து வைத்த பருப்பையும் கூட சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்க. கடைசியா கொஞ்சமா கொத்தமல்லி இலைகளை துவி இறக்குங்க.
ரொம்ப எளிமையான ரொம்ப டேஸ்டியான கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் உங்களுக்கு ரெடி! இதை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரண்ட் சீக்ரெட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!
