Paneer Bhurji. பன்னீர் புர்ஜி

செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...  

 பன்னீர் புர்ஜ்ஜி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பன்னீர் 100 கிராம்,

பட்டர் இரண்டு துண்டுகள்,

வெங்காயம் இரண்டு,

தக்காளி ஒன்று,

கடலை மாவு மூன்று டேபிள்ஸ்பூன்,

பால் 100ml,

தயிர் 50ml,

மஞ்சள் தூள் கால் டேபிள் ஸ்பூன்,

மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,

சீரகத்தூள் 1/2 டேபிள் ஸ்பூன்,

கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்,

இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டேபிள் ஸ்பூன்,

உப்பு தேவையான அளவு,

பச்சை மிளகாய் இரண்டு,

கொத்தமல்லி இலைகள் சிறிதளவு,

வெங்காயத்தாள் சிறிதளவு.


செய்முறை:

ஒரு கடாய் அல்லது பேன் எடுத்துக்கோங்க. அதுல ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் ஆயில், நம்ம எடுத்து வைத்த இரண்டு பட்டர் துண்டுகளையும் சேர்த்து நல்ல ஹீட் பண்ணுங்க. இவை இரண்டு ஹீட்டானதுக்கப்புறமா நாம எடுத்து வைத்த மூன்று டேபிள் ஸ்பூன் கடலை மாவையும் சேர்த்து நல்ல ஃப்ரை பண்ணி விடுங்க. கடலை மாவு தீஞ்சு போயிறக்கூடாது. ஸ்லோ ஃபிளேம்ல வச்சு பிரை பண்ணுங்க. கூடவே நாம எடுத்து வைத்த ரெண்டு வெங்காயத்தையும் பொடி பொடியா கட் பண்ணி அதுகூட சேர்த்துக்கோங்க. கூடவே இரண்டு பச்சை மிளகாயையும் பொடிப்பொடியா கட் பண்ணி அது கூட சேர்த்து நல்லா ப்ரை பண்ணுங்க. பச்சை மிளகாய் வெங்காயம் வதங்குனதுக்கு அப்புறமா அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்குங்க. அடுத்ததா ஒரு தக்காளியையும் பொடி பொடியா சேர்த்து நல்ல வதக்கி விடுங்க. கொஞ்சமா சால்ட் சேர்த்துக்கோங்க. இது எல்லாம் நல்லா வதங்குனதுக்கு அப்புறமா நாம எடுத்து வைத்த மிளகாய் தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து அதுல பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்குங்க. 100 ml பால் சேர்த்து, அந்த பால்லையே இந்த மசாலா கலவைகளை வேக விடுங்க. நம்ம எடுத்து வைத்த 100 கிராம் பன்னீரையும் சின்ன சின்னதா சார்ப் பண்ணி இது கூட சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி விடுங்க. ஒரு ஐந்து நிமிடம் நல்லா வேக விடுங்க. அதுக்கு அப்புறமா 50ml தயிர் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி விடுங்க. கடைசியா கொத்தமல்லி இலைகளையும் வெங்காயத்தாளையும் தூவி இறக்குங்க.

ரெஸ்டாரன்ட்ல போய் நம்ம சாப்பிடுற பன்னீர் புர்ஜ்ஜி வீட்டிலேயே உங்களுக்கு ரெடி! இந்த டிஷ் எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரன்ட் சீக்ரெட் சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!!