புதினா ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் இரண்டு கைப்பிடி,
வெங்காயம் 2,
தக்காளி 1,
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்,
கடுகு 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்,
சீரகம் 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை 1 கொத்து,
உப்பு தேவையான அளவு,
கொத்தமல்லி இலை சிறிதளவு,
வெங்காயத்தாள் சிறிதளவு.
செய்முறை:
ஒரு மிக்ஸர் ஜார் எடுத்துக்கோங்க. அதுல நாம எடுத்து வைத்த இரண்டு கைப்பிடி புதினா இலைகளை நல்லா வாஷ் பண்ணிட்டு அதுல சேர்த்துக்கோங்க. அது கூடவே ஒரு ஐந்து அல்லது ஆறு ஐஸ்க்யூப் சேர்த்து நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க. ஐஸ் க்யூப்ஸ் எதுக்குன்னா அந்த புதினா இலைகளோட பச்சை நிறம் மாறாமல் இருப்பதற்காகதான் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கிறோம். இல்லையென்றால் லைட் பிரவுன் கலரா மாறிடும். ஒரு கடாய் எடுத்துக்கோங்க. அதுல மூன்று டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்து, ஆயில் ஹீட் ஆனதுக்கு அப்புறமா, கடுகு சேர்த்து கடுகு பொரிஞ்சதுக்கு அப்புறமா உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து நல்லா பொரிய விடுங்க அப்புறமா ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து பொரிய விடுங்க இப்ப நம்ம கட் பண்ணி எடுத்துக்கிட்ட இரண்டு வெங்காயங்களை சேர்த்து நல்ல வதக்குங்க. வெங்காயம் வதங்குனதுக்கு அப்புறமா அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்ல வதக்கி விடுங்க. ஒரு தக்காளியை நல்லா பொடி பொடியா கட் பண்ணி அதையும் சேர்த்து நல்ல வதக்கி விடுங்க. இது கூடவே கொஞ்சமா சால்ட் சேர்த்துக்கோங்க. அரைத்து எடுத்த புதினா இலைகளையும் சேர்த்துக்கோங்க. நல்லா மிக்ஸ் பண்ணி ஒரு ரெண்டு நிமிஷம் வேக விடுங்க. வேகவைத்து எடுத்துக்கிட்ட சாதத்தையும் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி விடுங்க. கடைசியா கொஞ்சமா கொத்தமல்லி இலைகள், வெங்காயத்தாள் தூவி இறக்குங்க.
இரண்டு பேர் சாப்பிடுற சாதத்திற்கான அளவுல தான் இந்த புதினா ரைஸ் ப்ரிப்பேர் பண்ணி இருக்கோம். இந்த ஹெல்த்தியான புதினா சாதத்தை நீங்க எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரண்ட் சீக்ரெட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. தேங்க்யூ ஃபார் வாட்சிங்!
