சிம்பிள் மட்டன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மட்டன் 500 கிராம்.
சின்ன வெங்காயம் 20 முதல் 25.
தக்காளி 2.
உருளைக்கிழங்கு 1.
தேங்காய்க் கால் மூடி,
பட்டை 1,
கிராம்பு 4,
பிரியாணி இலை 1,
சோம்பு 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்,
தனியாத்தூள் 1.1/2 டேபிள் ஸ்பூன்,
மட்டன் மசாலா 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ஒரு குக்கரை எடுத்துக்கோங்க. அதுல மூன்று டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்துக்கோங்க. ஆயில் ஹீட்டானதுக்கப்புறமா நாம எடுத்து வைத்த பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து நல்ல வதக்குங்க. அது கூடவே சோம்பும் சேர்த்து நல்ல வதக்கி விடுங்க. அடுத்ததா நாம எடுத்து வைத்த சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நல்ல வதக்குங்க. வெங்காயம் தக்காளி வதங்குனதுக்கு அப்புறமா இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து அதோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்ல வதக்கி விடுங்க. அடுத்ததா மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மட்டன் மசாலா சேர்த்து நல்ல வதக்கி விடுங்க. அடுத்ததா நம்ம எடுத்து வைத்த மட்டனையும் ஒரு மூணு அல்லது நான்கு முறை நல்ல வாஷ் பண்ணி சுத்தம் பண்ணிட்டு கூட சேர்த்துக்கோங்க. நாம எடுத்து வைத்த ஒரு உருளைக்கிழங்க அதோட தோல்களை நீக்கிட்டு கட் பண்ணி சேர்த்துக்கோங்க. மட்டன் மூழ்குற அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கோங்க. கூடவே நாம எடுத்து வைத்த கால் முடி தேங்காயையும் நல்லா பேஸ்ட் பதத்துக்கு அரைத்து அதுகூட சேர்த்துக்கோங்க. நல்ல மிக்ஸ் பண்ணி விட்டுட்டு உப்பு காரம் எல்லாம் பார்த்து குக்கர் விசில் மூடி வைத்துவிடுங்கள். எட்டு முதல் பத்து விசில் வர வரைக்கும் நல்லா வேகவைங்க. குக்கர் ஆப் பண்ணிடுங்க. அப்புறமா எடுத்து செர்வ் பண்ணுங்க. இப்ப ரொம்ப எளிமையான முறையில சவுத் இந்தியன் ஸ்டைல் சிம்பிள் மட்டன் குழம்பு உங்களுக்கு ரெடி. இதை செய்வதற்கு ரொம்ப எளிமையா இருக்கும். இதை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரன்ட் சீக்கிரட் சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. தேங்க்யூ ஃபார் வாட்சிங்!
