Paneer Tikka. பன்னீர் டிக்கா


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்... 

பன்னீர் டிக்கா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பன்னீர் 100 கிராம்,

பெரிய வெங்காயம் ஒன்று. வெங்காயத்தை அதோட தோல்களை நீக்கிட்டு பாக்ஸ் ஷேப்ல கட் பண்ணி எடுத்துக்கோங்க,

தக்காளி ஒன்று. தக்காளியை அதோட விதைகளை எடுத்துட்டு மேல் பாகத்தை மட்டும் பாக்ஸ் ஷேப்ல கட் பண்ணி எடுத்துக்கோங்க,

குடைமிளகாய் ஒன்று எடுத்து அதையும் அதோட விதைகளை நீக்கிட்டு பாக்ஸ் ஷேப்ல கட் பண்ணி எடுத்துக்கோங்க.

மஞ்சள் தூள் 1/4 டேபிள் ஸ்பூன்,

மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்,

சால்ட் தேவையான அளவு,

தனியாதூள் 1 டேபிள் ஸ்பூன்,

சீரகத்தூள் 1/2 டேபிள்ஸ்பூன்,

மிளகுத்தூள் 1/2 டேபிள் ஸ்பூன்,

கரம் மசாலா 1/2 டேபிள்ஸ்பூன்,

கஸ்தூரி மேத்தி 1/4 டேபிள் ஸ்பூன்,

கடலை மாவு 2 டேபிள்,

ஸ்பூன் தயிர் 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

ஒரு மிக்ஸிங் பவுல் எடுத்துக்கோங்க. அதுல நாம எடுத்து வைத்த இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, அது கூடவே மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி, தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் இது எல்லாம் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க. தேவைப்பட்டா ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நல்ல மிக்ஸ் பண்ணி வைங்க.

டிக்கா செய்யும் நீளமான ஸ்டிக் எடுத்துக்கோங்க, அதுல நம்ம கட் பண்ணி எடுத்து வைத்த ஒரு பாக்ஸ் ஷேப் வெங்காயம், ஒரு பாக்ஸ் ஷேப்ல இருக்குற தக்காளி, ஒரு குடைமிளகாய், நம்ம கட் பண்ணி எடுத்துக்கிட்ட ஒரு பன்னீர் துண்டுகளையும் ஒன்னு ஒன்னா குத்தி எடுத்து வச்சுக்கோங்க. ஒரு ஸ்டிக்ல நான்குல மூன்று பங்கு வர்ற வரைக்கும் இதே லைன் மெத்தட்ல நீங்க குத்தி எடுத்துக்கோங்க. நாம இப்ப இதே மாதிரி மூன்று ஸ்டிக்ல எடுத்து வச்சிருக்கோம். அடுத்ததா நாம மிக்ஸ் பண்ணி எடுத்து வெச்ச மசாலா பேஸ்ட்ட ஒரு சிலிக்கான் பிரஷ்ஷாலையோ அல்லது கைகளை வச்சோ பன்னீர் வெங்காயம், தக்காளி குடைமிளகாய் எல்லாத்தையும் படற மாதிரி நல்ல தேய்த்து எடுத்துக்கோங்க. இப்போ இந்த ஸ்டிக்க மிதமான ஹீட்ல வச்சு ரொட்டி சுட்டெடுக்கிற ஹீட்டர் பிலேட்ல வச்சு ஒவ்வொரு பக்கமா மெதுவா திருப்பி வச்சி நல்லா வேகற வரைக்கும் ஹீட் பண்ணி எடுத்துக்கோங்க. உங்க கிட்ட மைக்ரோவேவ் ஓவன் இருந்தா அதுலயும் நீங்க செஞ்சு எடுத்துக்கலாம். 

இப்போ உங்களுக்கு ரொம்ப டேஸ்டியான பன்னீர் டிக்கா வீட்டிலேயே ரெடி! இதை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரண்ட் சீக்ரெட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!!!