Mutton Biriyani South Indian Style. மட்டன் பிரியாணி

செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

மட்டன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் 400 கிராம்
வெங்காயம் 3
தக்காளி 3
பச்சை மிளகாய் 3 
முந்திரி 15
புதினா ஒரு கைப்பிடி 
கொத்தமல்லி ஒரு கைப்பிடி 
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 1/2 ஸ்பூன் 
நெய் 25 ml 
பிரியாணி இலை 1
பட்டை 1 துண்டு 
ஸ்டார் பூ 1
ஜாதிப்பத்திரி 1
கல்பாசி 1
லவங்கம் 4 
ஏலக்காய் 4 
லெமன் 1/2 
மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன் 
மட்டன் மசாலா 1 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன் 
பிரியாணி மசாலா 1 டேபிள் ஸ்பூன் 
சீரகத்தூள் 1 டேபிள் ஸ்பூன் 
கஸ்தூரி மேத்தி 1/2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் பால் 200ml 
தயிர் 50ml
உப்பு தேவையான அளவு
மட்டன் 1/2 கிலோ

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மட்டன் பிரியாணி பாஸ்மதி ரைஸ் வச்சு எப்படி ப்ரிப்பேர் பண்ணலாம் அப்படிங்கிறத இந்த வீடியோல பார்க்கலாம்!

செய்முறை:

அரை கிலோ மட்டன் எடுத்து அதை மூன்று அல்லது நான்கு முறை நல்ல கழுவி சுத்தம் பண்ணிட்டு மட்டன் மூழ்குற அளவு தண்ணீர் சேர்த்து 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மட்டன் மசாலா சேர்த்து 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து ஐந்து முதல் ஆறு விசில் வரை விட்டு குக்கர்ல வேகவைத்து எடுத்துக்கோங்க. 

அடுத்ததா ஒரு குக்கர் எடுத்துக்கோங்க. அதுல 25ml நெய் சேர்த்து 50 ml தேங்காய் எண்ணெய் சேர்த்து இரண்டும் நல்ல ஹீட் ஆனதுக்கு அப்புறமா வாசனை பொருட்கள் எல்லாத்தையும் சேர்த்து கூடவே எடுத்து வைத்த முந்திரியையும் சேர்த்து நல்லா பொறிச்சி விடுங்க.

இது எல்லாம் நல்ல பொரிஞ்சு வந்ததுக்கு அப்புறமா நாம கட் பண்ணி எடுத்து வைத்த மூன்று வெங்காயத்தையும் நல்ல வதக்கி விடுங்க. வெங்காயம் நல்லா பொன்னிறமாக வதங்குனதுக்கு அப்புறமா நாம கட் பண்ணி எடுத்து வைத்த பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கிக்கோங்க. கூடவே நம்ம கட் பண்ணி எடுத்து வைத்த தக்காளியின் சேர்த்து நல்ல வதக்கி விடுங்க. இது மூணும் நல்லா வதங்கினதுக்கு அப்புறமா கூடவே ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்கி விடுங்க.

பச்சை வாசனை போனதுக்கு அப்புறமா மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா, சீரகத்தூள், கஸ்தூரி மேத்தி, தயிர் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி விடுங்க. அதுக்கு அப்புறமா நம்ம கட் பண்ணி எடுத்து வைத்த புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நல்ல வதக்கிக்கோங்க. நம்ம எடுத்து வைத்த கெட்டியான தேங்காய் பால் 200ml சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. 

அடுத்ததா நம்ம வேகவைத்து எடுத்து வைத்த மட்டன் துண்டுகளையும் கூட சேர்த்துக்கோங்க. மட்டன் வேக வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் அளந்து சேர்த்துக்கோங்க. 15 நிமிடம் ஊற வைத்து எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியையும் கூட சேர்த்துக்கோங்க. பாஸ்மதி அரிசி ஒரு கப் எடுத்தா தண்ணீர் ஒன்னரை கப் சேர்த்துக் கொள்ளணும். தேங்காய்ப்பால் 200ml எடுத்துருக்கோம். மட்டன் வேக வச்ச தண்ணீர் 200ml எடுத்து இருக்கோம். இது இல்லாம தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கோங்க. இப்போ தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கோங்க. கடைசியா 1/2 லெமன் ஜூஸையும் அது மேல பிழிஞ்சு விட்டு நல்ல மிக்ஸ் பண்ணி குக்கர மிதமான சூட்டுல வைத்து ஒரு ரெண்டு விசில் விட்டு எடுத்துக்கோங்க. 

குக்கர் விசில் போனதுக்கப்புறமா மூடிய ஓபன் பண்ணி ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட்டு அப்படியே சுடச்சுட சர்வ் பண்ணுங்க. இப்ப ரொம்ப டேஸ்டியான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பாஸ்மதி மட்டன் பிரியாணி உங்களுக்கு ரெடி! இதை எளிமையான முறையில் எங்க வீட்டிலேயே செஞ்சு பாருங்க.

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க! ஷேர் பண்ணுங்க! கமெண்ட் பண்ணுங்க! கூடவே ரெஸ்டாரன்ட் சீக்ரெட் சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!!

ரெஸ்ட்ராரென்ட் விலை (ஒரு நபருக்கு) : ரூ.280/-
வீட்டில் தயாரிப்பு செலவு (ஒரு நபருக்கு) : ரூ.150/-