Mushroom Biriyani. மஷ்ரூம் பிரியாணி

செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

மஷ்ரூம் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி 400கிராம்
காளான் 10 முதல் 15 Pcs 
வெங்காயம் 3 
தக்காளி 2
பச்சை மிளகாய் 3 
முந்திரி 10
கசகசா 1 டேபிள் ஸ்பூன் 
புதினா ஒரு கைப்பிடி அளவு 
கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு 
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் 25 ml 
பிரியாணி இலை 1 
பட்டை 1 துண்டு 
ஸ்டார் பூ 1 
ஜாதிப்பத்திரி 1 
கல்பாசி சிறிதளவு 
லவங்கம் 4 
ஏலக்காய் 4 
சோம்பு 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை 1/2 
மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன் 
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா 1/2 டேபிள் ஸ்பூன் 
பிரியாணி மசாலா 1 டேபிள் ஸ்பூன் 
சீரகத்தூள் 1/2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் பால் 200ml 
தயிர் 50ml 
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு மிக்ஸர் ஜார் எடுத்துக்கோங்க. அதுல நாம எடுத்து வைத்த வெங்காயத்துல ஒரு வெங்காயத்தை எடுத்து அதோட தோல்களை நீக்கிட்டு கட் பண்ணி சேர்த்துக்கோங்க. கூடவே இரண்டு தக்காளி, மூன்று பச்சை மிளகாய், 10 முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா சேர்த்து நல்லா பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க. 

ஒரு குக்கர் எடுத்துக்கோங்க அதுல 25ml நெய், 50 ml தேங்காய் எண்ணெய் சேர்த்து ரெண்டும் சூடானதுக்கு அப்புறமா நாம எடுத்து வைத்த வாசனை பொருட்கள் எல்லாத்தையும் சேர்த்து நல்ல பொரிஞ்சு வந்ததுக்கு அப்புறமா நாம கட் பண்ணி எடுத்து வைத்த இரண்டு வெங்காயத்தையும் சேர்த்து நல்ல வதக்கிக்கோங்க. வெங்காயம் வதங்கினதுக்கு அப்புறமா ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்கி விடுங்க.  

அடுத்ததா நம்ம அரைத்து எடுத்த பேஸ்டையும் சேர்த்து நல்ல வேக விடுங்க. அந்த கலவைகள் நல்லா வெந்ததுக்கப்புறமா மஞ்சள் தூள், மிளகாய் தூள் கரம் மசாலா, பிரியாணி மசாலா சீரகத்தூள், கொஞ்சமா சால்ட் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி விடுங்க. கூடவே புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து வதக்குங்க.

எல்லாம் வதங்குனதுக்கு அப்புறமா, 50ml தயிர் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி விடுங்க. அதுக்கப்புறம் நல்லா கிளீன் பண்ணி கட் பண்ணி எடுத்து வைத்த காளான் துண்டுகளையும் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி விடுங்க. கூடவே 200ml கெட்டியான தேங்காய் பால் சேர்த்து நல்ல கொதிக்க விடுங்க. அரை லெமன் எடுத்து அதோட ஜூஸையும் சேர்த்துக்கோங்க. 

நாம எடுத்து வைத்த 400 கிராம் அரிசியை நல்ல கழுவி வாஷ் பண்ணிட்டு ஒரு 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கோங்க. நம்ம தேங்காய் பாலில் 200ml சேர்த்து இருக்கு அதனால தண்ணீருக்கு 200ml கம்மியா தான் சேக்கணும். இப்போ அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கோங்க. 

பாஸ்மதி ரைஸ்க்கு ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக்கணும். எல்லாத்தையும் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி விட்டு உப்பு சரியா இருக்கா அப்படிங்கறதை பார்த்துட்டு குக்கரை மூடி வச்சு, மீடியம் ஃப்ளேம்லயே ஒரு ரெண்டு விசில் விட்டு எடுங்க. 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு மெதுவா சர்வ் பண்ணனும். ரொம்ப டேஸ்டியான ரெஸ்டாரன்ட் காளான் பிரியாணி உங்களுக்கு ரெடி! 

இந்த எளிமையான முறையில எல்லாரும் வீட்ல செஞ்சு பாருங்க! இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுனா லைக் பண்ணுங்க! ஷேர் பண்ணுங்க! கமெண்ட் பண்ணுங்க! கூடவே ரெஸ்டாரன்ட் சீக்ரெட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!!!

ரெஸ்ட்ராரென்ட் விலை (ஒரு நபருக்கு) : ரூ.150/-
வீட்டில் தயாரிப்பு செலவு (ஒரு நபருக்கு) : ரூ.70/-