மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மாங்காய் 3,
கடுகு 1 டேபிள் ஸ்பூன்,
வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 3,
கறிவேப்பிலை 3 கொத்து,
பூண்டு 10 பற்கள்,
இஞ்சி 1 துண்டு,
மஞ்சள் தூள் 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் 1/2 டேபிள் ஸ்பூன்,
சால்ட் 1 டேபிள் ஸ்பூன்,
வினிகர் 1 டேபிள் ஸ்பூன்,
செய்முறை:
மூன்று மாங்காய நல்ல வாஷ் பண்ணிட்டு அதோட விதையை நீக்கிட்டு சின்ன சின்னதா கட் பண்ணி எடுத்துக்கோங்க அதாவது பாக்ஸ் ஷேப்ல!
10 பூண்டு பற்களை நல்ல ஸ்மாஷ் பண்ணி எடுத்துக்கோங்க!
இஞ்சி 1 துண்டு எடுத்து அதோட தோல்களை நீக்கிட்டு அதையும் ஸ்மாஷ் பண்ணி எடுத்துக்கோங்க!
கட் பண்ணி எடுத்து வச்ச மாங்காய் துண்டுகளை ஒரு கண்ணாடி பவுல்லையோ அல்லது பீங்கான் ஜாடியிலையோ அல்லது சில்வர் பிளேட்லையும் சேர்த்து அது கூடவே சால்ட் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி ஒரு வாரத்துக்கு அப்படியே ஊற வைத்து எடுத்துக்கோங்க. மாங்காய் அந்த உப்புல ஊறி நல்ல ட்ரை ஆயிருக்கும். நம்ம அதை தாளிச்சு எடுத்துக்கலாம்.
ஒரு ஃப்ரை ஃபேனை எடுத்துக்கோங்க. அதுல மூன்று கொத்து கறிவேப்பிலையை ரோஸ்ட் பண்ணி எடுத்துக்கோங்க. அது கூடவே ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு நல்லா பொரியும் வரை ரோஸ்ட் பண்ணி எடுத்துக்கோங்க. வெந்தயத்தை அதோட கலர் மாறுற வரைக்கும் ரோஸ்ட் பண்ணி எடுத்துக்கோங்க. இது மூணையும் தனித்தனியாவே வறுத்து எடுத்துக்கலாம். இப்போ ஆறவைத்து மூனையும் ஒன்னா சேர்த்து ஒரு மிக்ஸர் ஜார்ல அரைத்து பொடியாக எடுத்துக்கோங்க.
ஒரு ஃப்ரை ஃபேனை எடுத்துக்கோங்க. 50ml ஆயில் சேர்த்து ஆயில் சூடானதுக்கப்புறமா கால் டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து கடுகு பொரிஞ்சதுக்கு அப்புறமா நாம ஸ்மாஷ் பண்ணி எடுத்து வச்ச பூண்டு பற்கள், இஞ்சி ஒரு துண்டு சேர்த்து நல்ல ஃப்ரை பண்ணி விடுங்க. இது கூடவே மூன்று காய்ந்த மிளகாய் கட் பண்ணி கால் டேபிள்ஸ்பூன் சால்ட் சேர்த்து கூடவே ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நல்ல ஃப்ரை பண்ணுங்க.
இது கூடவே ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்துக்கோங்க. நம்ம அரைச்சு எடுத்து வைத்த பொடியையும் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி விடுங்க. கடைசியா நம்ம ஒரு வாரம் ஊற வைத்து எடுத்த மாங்காய் துண்டுகளையும் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி இறக்கி வைங்க.
ஆறினதுக்கு அப்புறமா அதை ஒரு கண்ணாடி கண்டெய்னர்லையோ அல்லது பீங்கான் ஜாடிலையோ ஸ்டோர் பண்ணி வைங்க. நீங்க இந்த மெத்தட்ல செஞ்சீங்கன்னா ஊறுகாய் ஒரு ஆறு மாதத்துக்கு நீங்க யூஸ் பண்ணலாம். உங்களுக்கு தேவையான போது கொஞ்சம் கொஞ்சமா எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். அதிக நாள் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்! இதே மெத்தட்ல நீங்க வீட்ல செஞ்சு பாருங்க.
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுனா லைக் பண்ணுங்க! ஷேர் பண்ணுங்க! கமெண்ட் பண்ணுங்க! கூடவே ரெஸ்டாரன்ட் சீக்ரெட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க!! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!