Kala Kala கல கலா ஸ்நாக்


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...
 

கலகலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

மைதா மாவு 250 கிராம்,

அரிசி மாவு 100 கிராம்,

ரவை மூன்று டேபிள் ஸ்பூன்,

சர்க்கரை 150 கிராம் (இதை மிக்ஸர் ஜார்ல அரைத்து பவுடர் சுகரா எடுத்துக்கோங்க)

பால் 100ml,

தயிர் இரண்டு டேபிள்ஸ்பூன்,

உப்பு அரை ஸ்பூன்,

ஆப்ப சோடா 1/4 ஸ்பூன்,

சீரகம் அரை ஸ்பூன்,

நெய் இரண்டு ஸ்பூன்.


செய்முறை:

ஒரு மிக்சிங் பவுல் எடுத்துக்கோங்க. அதுல நாம எடுத்து வைத்த மைதா மாவு, அரிசி மாவு, ரவை, சர்க்கரை, பால், தயிர், உப்பு, ஆப்ப சோடா, சீரகம் நெய் எல்லாம் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு நல்ல மிக்ஸ் பண்ணி எடுத்துக்கோங்க. நாம ரெடி பண்ணி வச்ச மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடுங்கள். நம்ம ரெடி பண்ணி வச்ச மாவ ஒரு சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்ச்சி சின்ன சின்னதா ஸ்கொயராவோ இல்ல டைமண்ட் ஷேப்பில் கட் பண்ணி எடுத்துக்கோங்க. ஒரு கடாய் எடுத்துக்கோங்க. தேவையான அளவு ஆயில் சேர்த்துக்கோங்க. மீடியம் ஃபிளேம்ல வச்சு ஆயில் ஹீட் பண்ணிக்கோங்க. ஆயில் ஹீட் ஆனதுக்கப்புறமா நம்ம கட் பண்ணி எடுத்துக்கிட்ட கலகலவை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து பொரிச்சு எடுத்துக்கோங்க. ரொம்ப டேஸ்டியான கலகலா உங்களுக்கு ரெடி! 

இதை நீங்க 10 முதல் 15 நாட்கள் வைத்து சாப்பிடலாம். நாம நெய்யும் சேர்த்து ப்ரிப்பேர் பண்ணி இருக்கிறதுனால ரொம்ப டேஸ்டியா இருக்கும். குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க! இதை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரண்ட் சீக்ரெட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!