Cluster Beans Fries. கொத்தவரைக்காய் பொரியல்.

செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...


கொத்தவரைக்காய் பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கொத்தவரக்காய் 1/4 கிலோ,

வெங்காயம் 1,

பாசிப்பருப்பு 3 டேபிள் ஸ்பூன்,

கருவேப்பிலை சிறிதளவு,


அரைத்து எடுக்க:

தேங்காய் 1 துண்டு,

சீரகம் 1/4 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் 2,

இது மூன்றையும் சேர்த்து நல்லா டிரையா அரைச்சு எடுத்து வெச்சுக்கோங்க.


செய்முறை:

நாம எடுத்து வைத்த கொத்தவரக்காய நல்ல வாஷ் பண்ணிட்டு சின்ன சின்னதா கட் பண்ணி எடுத்துக்கோங்க. ஒரு கடாயில கொத்தவரைக்காய் மூழ்குற அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கோங்க. கூடவே எடுத்து வைத்த 3 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பையும் கழுவி அது கூட சேர்த்துக்கோங்க. இது கூடவே 1/4 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், 1/4 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நல்லா வேகவைத்து எடுத்துக்கோங்க. நல்ல வெந்ததுக்கு அப்புறமா தண்ணி மீதம் இருந்தா அந்த காய பில்டர் பண்ணி எடுத்துக்கோங்க. 

ஒரு பிரை பேன் அல்லது கடாய் எடுத்துக்கோங்க. இரண்டு டேபிள் ஸ்பூன் சமையலுக்கு யூஸ் பண்ற ஆயில் சேர்த்துக்கோங்க. அதுல 1/4 டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து கொஞ்சமா கருவேப்பிலை சேர்த்து பொரிஞ்சதுக்கு அப்புறமா நாம எடுத்து வைத்த ஒரு வெங்காயத்தை சின்ன சின்னதா கட் பண்ணி அது கூட சேர்த்து நல்ல ஃப்ரை பண்ணிக்கோங்க. 

வேகவைத்து எடுத்து வைத்த கொத்தவரைக்காயும் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி விடுங்க. கடைசியா நாம அரைத்து எடுத்த தேங்காயையும் சேர்த்து ஒரு ரெண்டு நிமிஷம் நல்ல மிக்ஸ் பண்ணி இறக்கினீங்கன்னா ரொம்ப டேஸ்டியான கொத்தவரைக்காய் பொரியல் உங்களுக்கு ரெடி!

இதை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரண்ட் சீக்ரெட் சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க தேங்க்யூ ஃபார் வாட்சிங்.